மூக்குத்திப் பூக்கள்
Subscribe to Oneindia Tamil

தெருவோரம் முளைத்திருக்கும்
இளஞ்சிவப்பு நிறப் பூக்கள்
கைப்பட்டாலே கசங்கிவிடும் மென்மை...
செடிக்கும் நோகமல்
குட்டிப் பூவை பறித்து
என் மூக்கின் மீது ஒட்டவைத்தாய்...
ஒரு சின்னஞ் சிறிய பூ
என்னுள் இத்தனை
மாற்றத்தை ஏற்படுத்துமா என்ன?...
கண்ணாடியில் முகம் பார்த்தபோது
என் அழகின் மீது
எனக்கே கர்வம் வந்தது...
எனக்குள் அன்றே
மூக்குக் குத்திக் கொள்ள வேண்டும்
என்ற ஆசை எழுந்தது...
ஆனால் என்ன செய்ய?
உனக்குப் பிடிக்காது
என்பதற்காகவே
என் ஆசை நிராசையாகிப்போனது.












Click it and Unblock the Notifications