மாசித் திருவிழா : நாளை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் தோராட்டம் நாளை ( வெள்ளிக்கிழமை )நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
இந்த தேரோட்டத்தின்போது பெரிய தேரில் சுவாமியும், சிறிய தேரில் அம்பாளும் ரத வீதிகளில் பவனி வருவார்கள்.
தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications