இன்று துபாயில் சித்திரைத் திருவிழா: துபாய் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இன்று மாலை 5.30 மணிக்கு சித்திரைத் திருவிழா மற்றும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் அல் தவார் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக இந்திய சமூக நலக்குழுவின் கன்வீனர் கே. குமார் கலந்து கொள்கிறார். இந்த தகவலை துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தெரிவித்தார்.
மாலை 5.30 மணிக்கு துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் கல்து கொள்ளும் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து 6 மணிக்கு சித்திரை திருவிழா கொண்டாட்டங்கள் துவங்குகிறது.
சித்திரைத் திருவிழாவினையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறி்த்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதனை 050 5787657 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.













Click it and Unblock the Notifications