ராஸ் அல் கைமாவில் கார்ஸ் குழுமம் ஏற்பாடு செய்த கிரிக்கெட் போட்டி
ராஸ் அல் கைமா : துபாயில் இருந்து சுமார் நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராஸ் அல் கைமா. இங்கு கார்ஸ் குழுமத்தின் சார்பாக கிரிக்கெட் போட்டி கடந்த 13-ம் தேதி மாலை நடைபெற்றது.
13 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டி மாலை 5 மணிக்கு துவங்கி அதிகாலை 5 மணி வரை நடந்தது.
இப்போட்டியில் ஷார்ஜா, துபாய், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா, அல் கூஸ், அல் கிஸஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன. மொத்தம் 12 போட்டிகள் நடைபெற்றன.
இதில் அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடின. இறுதிப் போட்டியில் ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா அணிகள் மோதின. ராஸ் அல் கைமா அணியின் பந்து வீச்சில் ஷார்ஜா அணி விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன.
அந்த அணி 10 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ராஸ் அல் கைமா அணி சிறப்பாக விளையாடி 9 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கும் மற்றும் அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்ற அதன் ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும் கார்ஸ் கம்பெனி தங்களது வாழ்துக்களை தெரிவித்துக் கொண்டது. மேலும் கார்ஸ் ராஸ் அல் கைமா மேலாளர் ஜனாப். ஹபிபுல்லாஹ் அவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications