சபரிமலையில் பக்தர்களுக்காக ரூ. 100 கோடியில் புதிய திட்டம் - உயர்மட்ட குழு முடிவு

சபரி்மலைக்கு வரும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குறை உண்டு. இது குறித்து விவாதிக்க கொச்சியில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ. நாயர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிஜித்பாகாயத், கேரள கூடுதல் தலைமை செயலாளர் ஜெயக்குமார், தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சபரிமலை வரும் பக்தர்களுக்கு ரூ.100 கோடியில் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நிலக்கல் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யவும், அங்கு வாகனங்களை நிறுத்த கூடுதல் இடவசதி செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. தற்போது அங்கு 1000 வாகனங்களை நிறுத்தலாம். இதை 3 மடங்காக உயர்ந்த தேவையான வசதிகள் செய்யவும், நிலக்கல் பகுதியில் இருந்து பம்பைக்கு பக்தர்களின் வாகனங்களை அனுமதிக்க தடை விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் பம்பையில் நெரிசலை குறைக்கும் வகையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் நிலக்கல் பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு கேரள அரசு பஸ்சில் தான் பம்பைக்கு செல்ல வேண்டும்.
நிலக்கல் பகுதியில் பம்பா நதியில் ஒரு தடுப்பணை கட்டி பக்தர்களுக்கு கூடுதல் தண்ணீர் வசதி செய்து தரப்படும்.
பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்வதற்கு ஒரு வழியும், திரும்பி வருவதற்கு ஒரு வழியும் அமைக்கப்படும். சன்னிதானத்தில் இருந்து திரும்புவதற்காக மட்டுமே அங்கு மேம்பாலம் அமைக்கப்படும்.
அப்பம், அரவணை தயாரிப்பு கூடத்தை சன்னிதானத்தில் இருந்து திரும்பும் வழியில் ஏதாவது ஒரு இடத்தில் அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
போதிய வசதியின்மை மற்றும் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக, சமீபத்தில் சபரிமலையில் ஏற்பட்ட விபத்தில் 109 பக்தர்கள் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications