இன்டர்வியூவில் ஜெயிக்க எந்த உடை அணியலாம்?
ஆணோ, பெண்ணோ அழகாய் உடை அணிய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அடுத்தவர் கண்ணுக்கு அழகாய் தெரிவது ஒரு பக்கம் இருந்தாலும் பிறரிடம் நல்ல மதிப்பினை ஏற்படுத்துவது நாம் அணியும் உடைதான்.
குறிப்பாக நேர்முகத்தேர்வுக்கு செல்லும் பெண்கள் அதற்கென அமைந்துள்ள ஆடைகளை அணிந்து சென்றாலே வெற்றியின் அருகில் சென்றுவிடலாம்.
இந்திய பாரம்பரியம்
முன்பெல்லாம் நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தைப் பொறுத்து உடை அணிந்து செல்வார்கள். புடவை, சுரிதார், சல்வார் என்பதுதான் நிர்ணயிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட உடையாக இருந்தது. இன்றைக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பணிபுரியும் அலுவலகங்களின் பின்னணியும் மாறி விட்டது.
உடையில் தேவை கண்ணியம்
எந்த ஒரு அலுவலகம் என்றாலும் அதற்கென உள்ள நெறிப்படி உடை அணிவது முக்கியம். என்னதான் படு நாகரீகமான வேலை என்றாலும் ஜீன்சும், டீ சர்ட்டும் அணிவது மரபல்ல. பேண்ட், சட்டை அணிவது தவறில்லை. இன்டர்வியூ செய்பவர் உங்களைப்பற்றி உயர்ந்த அபிப்ராயம் கொள்ளும் வகையில் உடைகள் பிரதிபலிக்க வேண்டும்.
புடவையோ, சல்வாரோ அணியும் உடை எதுவென்றாலும் உங்களுக்குப் பொருத்தமானதாக அணிந்து செல்லுங்கள். தரமான உடைகளை அணிவது மிகவும் முக்கியம்.
உடைகள் சுத்தமாகவும் பகட்டாக இல்லாமலும் உள்ள உடைகளை அணியுங்கள்.எந்த உடையேனும் உங்களுக்கு அணியும் பொழுது உற்சாகம் ஏற்படுத்தும் என்றால் அதனை தேர்ந்தெடுங்கள். தேர்வாளரின் கண்ணை உறுத்தாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிக மேக்கப்பை தவிர்க்கவும், அளவான படிக்கு பார்ப்பவர்களின் மனதில் கண்ணியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அலங்காரம் செய்யவும்.
வாசனை திரவியங்களை தவிர்ப்பது நல்லது. சில சமயம் தேர்வாளரின் மனதில் இது உங்களைப் பற்றிய எதிர் எண்ணங்களை உருவாக்கலாம்.
முதல் நாள் இரவு வெகு நேரம் கண்விழிப்பது அடுத்த நாள் உங்களது தோற்றப் பொழிவில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அடிப்படை விபரங்கள் அறிந்து செல்லுங்கள்
உங்களைத் தேர்வு செய்யும் நிறுவனம் பற்றிய அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளவும். நீங்கள் கலந்து கொள்ளும் பணியின் அடிப்படை விவரங்கள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளவும்.
நீங்கள் கலந்து கொள்ளும் நேர்முகத்தேர்வு உங்களுக்கு மட்டும் நடத்தப் படுவதல்ல உங்களைப் போன்ற பல போட்டியாளர்கள் தொடர்ந்து கலந்து கொள்கின்றார்கள் என்பதை மனதில் வைக்கவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்தை முதல் நாளே சென்று பார்த்து வரவும். இது மனதில் ஒரு தேவையற்ற அச்ச உணர்வைப் போக்கும். நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம் இடம் பற்றி உறுதிப் படுத்திக் கொண்டு சரியான நேரத்திற்கு சென்றடையும் படி ஏற்பாடு செய்து கொள்ளவும்.
நீங்கள் கலந்து கொள்ளும் நேர்முகத் தேர்வில் உங்களைப் போன்று கலந்து கொள்ளும் நபர்களுடனோ அல்லது வேறு நபர்களுடன் பேசும் பொழுது அவர்கள் உங்கள் மனதில் ஏதாவது எதிர் எண்ணங்களை ஏற்படுத்தாதபடிக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன்பு தனி அறையில் அமர வைக்கப்பட்டால் முடிந்தமட்டும் அருகில் உள்ளவர்களுடன் அளவாகப் பேசுங்கள், தேவையில்லாமல் பேசி உங்கள் மன ஆற்றலைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் முழு கவனமும் தேர்வின் மீதே இருக்கட்டும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போது வயிறு முட்ட சாப்பிட்டும் செல்ல வேண்டாம், வயிற்றைக் காயப் போட்டும் செல்ல வேண்டாம். மிதமான உணவு, உங்களதை உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
தேர்வுக்கு செல்லும் முன்பே இயற்கை உபாதைகள் மனச்சலனம் ஏற்படுத்தாத படிக்கு முன்னேற்பாடு செய்யுங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications