மதுரை மீனாட்சி கோயிலுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!

மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் உலகப் புகழ் பெற்றது.
சரித்திரத்துக்கும் அப்பால், புராதன காலத்தைச் சேர்ந்த இத்திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இறைவனே மன்னனாக அவதரித்து மதுரையில் ஆட்சி செலுத்தியதாக கோயில் வரலாறு கூறுகிறது.
பக்தர்கள் மட்டுமின்றி கோயிலின் கலை அழகைக் காண்பதற்காக வெளிமாநிலம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் தினமும் நூற்றுக்கணக்கில் வந்துசெல்கின்றனர்.
இதையடுத்து திருக்கோயில் நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் கோயில்வளாகம் தற்போது பசுமை நிறைந்ததாகவும், நவீன கற்கள் பதிக்கப்பட்டதாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வரும் நிலையில் அவர்களுக்கான சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து தந்துள்ளது. இதையடுத்து திருக்கோயில் வளாகத்தின் சுகாதாரம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
ஐ.எஸ்.ஓ. தரச்சான்றுக்கு கோயில் நிர்வாகம் விண்ணப்பித்திருப்பதை இந்து அமைப்புகள் எதிர்த்தன. இதையடுத்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.
கோயிலுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று தேவையற்றது என்று தர ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவினரிடம் பக்தர்கள் சார்பில் மனுக்களும் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு திருக்கோயிலில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கான வசதிகள், திருக்கோயில் யானை உள்ளிட்டவற்றைப் பராமரிக்கும் இடங்கள், கோயில் சுகாதாரம், குடிநீர் வசதிகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் அடிப்படையில் தற்போது மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது. இச்சான்று ஐ.எஸ்.ஓ. மூலம் திருக்கோயில் நிர்வாக அலுவலர் ஆர்.பத்மநாபனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications