8-ம் தேதி ரியாத்தில் ஜாமியாவின் 90 வது நிறுவன நாள் விழா
Subscribe to Oneindia Tamil
ரியாத்: ரியாத் ஜாமியா மில்லியா இஸ்லாமியா முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 90 வது நிறுவன நாள் விழா வரும் 8-ம் தேதி ரியாத் பேலஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாராளுமன்ற உறுப்பினருமான முஹம்மது அஸாருத்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இதில் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் புதுடெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 059 3026429 / 0556462749 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications