15ல் முதுகுளத்தூரில் அப்துல் கலாம் பங்கேற்கும் கல்வி விழிப்புணர்வு கலந்துரையாடல்
Subscribe to Oneindia Tamil
முதுகுளத்தூர்: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி. ஜெ. அப்துல் கலாம் அவர்கள் கலந்து கொள்ளும் "கல்வி-அறிவியல் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி" முதுகுளத்தூரில் வரும் 15-ம் தேதி நடக்கிறது.
முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் "கல்வி-அறிவியல் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி" வரும் 15-ம் தேதி நடக்கிறது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி மாணாக்கர் தவிர சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு நடந்து வருகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 56 பேர் கொண்ட குழு செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications