போர்க் குற்றவாளிகள்: ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் தமிழாக்க புத்தக வெளியீடு
ஐ.நா. நிபுணர் குழு இலங்கை மீது சுமர்த்தியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய ஆவண அறிக்கையை மனிதம் என்ற மனித உரிமை அமைப்பு தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளது.
இரண்டு பாகங்களை கொண்டுள்ள இப்புத்தகத்திற்கு, இன்று உலக தமிழர்களை ஒன்றிணைத்து வரும் தமிழீழ நாடு கடந்த அரசின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரனும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பணியாளர் எம்.ஜே. இம்மானுவேல் அவர்களும், தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரெஜி அவர்களும், மற்றும் நிர்மல்கா பெர்னான்டோ (தலைவர், IMADR, இலங்கை), பேரா. பீட்டர் ஷால்க் (அப்சாலா, ஸ்வீடன்), ஊடகவியலாளர் மற்றும் செய்தி ஆசிரியர் இரா. துரைரத்தினம், டாக்டர் பிரயன் செனிவரத்னே (ஆஸ்திரேலியா) ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர்.
முதல் பாகத்தில், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை சார்ந்துள்ள பல்வேறு செய்திகளை கொண்ட நான்கு கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழீழம் மலருவதற்கான வாய்ப்பு - ராஜபக்சே குழு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவர் (அக்னி சுப்ரமணியம், தமிழ் நாடு), ஐ.நா. -இலங்கை இடையிலான அறிக்கை குறித்த மோதல் (டி.பி.எஸ்.ஜெயராஜ்), இலங்கையின் கொலைக்களம் - சாட்சிகளற்ற யுத்தம் குறித்த மூன்று ஆவணப்பட சாட்சியங்கள் (யமுனா ராஜேந்திரன், லண்டன்), எமது மக்களது விடுதலையை வென்றெடுக்க அய்யன்னா வல்லுநர் குழு அறிக்கையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் (தங்கவேலு வேலுபிள்ளை, தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பாகம் முழுவதும் 444 குறிப்பு எண்களைக் கொண்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை படங்களோடு, மொத்தம் 352 பக்கங்களை கொண்டு தமிழில் தொகுக்கப்பட்டிருக்கிறது.
இப்புத்தகம் இன்னும் சில தினங்களில் தமிழகம் மற்றும் உலகம் முழுக்க விற்பனைக்கு வரவிருக்கிறது.
வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்ட தமிழினப் படுகொலைகள் (1956-2008) என்ற புத்தகத்தை கடந்த 2009-ம் ஆண்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய மனிதம் வெளியீட்டாளரின் இரண்டாவது ஆவணப் புத்தகமாக, "போர்க் குற்றவாளிகள்" வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்













Click it and Unblock the Notifications