உஷ்ணத்தை சமப்படுத்தும் புளிச்ச கீரை
ஆந்திராவில் புளிச்ச கீரைக்கு தனி மதிப்பு உண்டு. கோங்குரா என்று அழைக்கப்படும் புளிச்ச கீரையின் காம்புகளும் தண்டும் சிவப்பு நிறத்தில் காணப்படும். உடல் உஷ்ணத்தை குறைத்து சமப்படுத்துவதில் புளிச்ச கீரைக்கு முக்கிய பங்குண்டு. இதன் இலைகள், மலர்கள் மற்றும் விதைகள் மருத்துவ குணம் கொண்டவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
புளிச்சகீரை செடியின் மலர்களில் இருந்து கன்னாபினிடின், கன்னாபிஸ்சிட்ரின், கன்னாபின்னின், ஆகியவை எடுக்கப்படுகின்றன. கரிம அமிலங்களான லினோலியிக் ஒலியிக், பால்மிடிக் அமிலங்கள் விதைகளில் உள்ளன. இலைகளில் ப்ரக்டோஸ், குளுக்கோஸ், மானேஸ் சர்க்கரைகளும், லிக்னோசெரிக், வனிலிக், சிரோடிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப்படுகின்றன.
வாயுத் தொல்லையை நீக்கும்
வாயு தொடர்பான அனைத்து நோய்களையும் புளிச்ச கீரை குணப்படுத்தும். காய்ச்சல் காரணமாக நாவில் ருசி மறைந்துவிட்டால் புளிச்ச கீரை ருசியை உணரவைக்கும். காச நோயை குணப்படுத்தும். தாது விருத்தியையும், இந்திரியக் கட்டையையும் உண்டாக்கும்.
வைட்டமின் மற்றும் இரும்புசத்து நிறைந்த புளிச்சகீரை உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சத்து குறைவினால் நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு இந்த கீரையை தினமும் உணவோடு சேர்த்து கொடுத்து வர அவர்களின் உடல் புஷ்டியாகும்.
காசநோயை குணமாக்கும்
புளிச்ச கீரை ரத்தத்தை சுத்திகரிக்கிறது. காசநோய் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தும். அதனால்தான் இந்த கீரையை உடலையும் குடலையும் குணமாக்கும் கீரை என்கின்றனர்.
சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்த கீரையை சட்னியாக செய்து சாப்பிட்டால் தோல் தொடர்பான நோய்கள் குணமடையும். நீண்ட நாட்களாக மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் நாளடைவில் மலச்சிக்கலே ஏற்படாத வகையில் மறைந்துவிடும்.
மஞ்சள் காமலைக்கு மருந்தாகும்
புளிச்ச கீரை மஞ்சள் காமலைக்கு அருமருந்தாகும். நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் கைப்பிடி அளவு புளிச்சகீரையை அரைத்து சாறு எடுத்து மோருடன் கலந்து பருகிவர மஞ்சள் காமாலை குணமடையும் விதைகள் பால் உணர்வு தூண்டுவி. வலி போக்க மேல் பூச்சாகிறது. கனிகளின் சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குணமடையும்.
வாத நோய்களை குணமாக்கும் தன்மை புளிச்ச கீரைக்கு உண்டு. இது பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் சம்பந்தமுடையவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.உணவில் அதிக அளவு கீரைகள் சேர்ப்பது நல்லது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications