இந்திரா விருது பெற முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் தாரியா தேர்வு

முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் மோகன் தாரியா (86). இவர் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியாற்றி உள்ளார். தொழில் தொடர்பான வழக்கறிஞரான மோகன் தாரியா, திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
சுற்றுச்சுழல் ஆர்வலராக இவர், வனராய் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தேசிய ஒருமைப்பாட்டை காக்க உழைத்த அவரது பணியை பாராட்டி இந்திரா காந்தி விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பாக மோகன் தாரியா, பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தி விருது:
கடந்த 1985ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்திரா காந்தி விருது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளான அக்டோபர் 31ம் தேதி ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த குழுவின் தலைவராக சோனியா காந்தி உள்ளார். இந்திரா காந்தி விருதுடன் 5 லட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்படும்.
காங்கிரஸ் கட்சி நூற்றாண்டை கடந்ததை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும், சிறந்த நபர்கள் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தகவல்களை இந்திரா காந்தி விருது குழுவின் உறுப்பினர் செயலர் மோதிலால் வோரா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications