நிறைவேறாத கனவுகள்
Subscribe to Oneindia Tamil

பத்து வயதில்
பட்டுப் பாவடைக்காக
வந்த கனவு
பலித்ததில்லை …
பதினாறு வயதில்
கொலுசணிந்தது போல்
கண்ட கனவு
நிறைவேறியதில்லை..
இருபது வயதில்
காளை ஒருவனை
கைத்தலம் பற்றியது போல்
கண்ட கனவும்
நிஜமானதில்லை….
எத்தனையோ கனவுகள்
கண்டும்
எதுவுமே பலிக்காததால்
கனவுகளை புதைத்து விட்டு
நிஜங்களை நேசிக்க
நினைக்கையில்….
எதிர்பாராமல் கிடைக்கிறது
பட்டுப்பாவாடையும்
வெள்ளிக் கொலுசும்.












Click it and Unblock the Notifications