மீண்டும் உடைந்தது பல்சக்கரம்: ஊட்டி மலை ரயில் ரத்து

ஊட்டி மலை ரயில்:
ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்வது மலை ரயில். மேட்டுப்பாளையத்தில் துவங்கி குன்னூர் வழியாக ஊட்டி வரை செல்லும் இந்த மலை ரயில் பசுமையான காடுகள், கணவாய்கள் ஆகியவற்றை ஊடறுத்துச் செல்வதால் இதில் பயணிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
அடுத்தடுத்து செயலிழப்பு:
இந்த முறை சீசன் துவங்கியதிலிருந்தே இந்த ரயில் அடிக்கடி நின்று போவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் தடம் புரண்டதால் ஒருவாரகாலமாக தண்டவாளம் சீரமைக்கப்பட்டு நேற்றுத்தான் போக்குவரத்து துவங்கியது.
உடைந்துபோன பல் சக்கரம்:
இந்நிலையில் நேற்றைய பயணத்தின்போது பீனியன் வீல் எனப்படும் தண்டவாளப் பல்சக்கரம் சேதம் அடைந்தது. மலையேற்றத்தின்போது ரயில் தானாகவே பின்வராமல் இருக்க தாங்கிப்பிடிப்பதே பீனியன் வீலின் பணி. ரண்ணிமேடு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது தண்டவாளம் உடைந்திருப்பதை ரயில் ஓட்டுனர் நசுரூதின் கண்டுபிடித்தார். இதனை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
வருகிறது அதிகாரிகள் குழு:
அடுத்தடுத்து ரயில் நிறுத்தப்படுவதால், சென்னையிலிருந்து ரயில்வே அதிகாரிகள் இன்று குன்னூருக்கு வர இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications