அரசு திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 18-ம் தேதி முதல் வழங்கப்படுகின்றது.

சென்னை தரமணியில் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரி உள்ளது. இங்கு ஒளிப்பதிவு, பிலிம் பிராசசிங், சவுண்ட் என்ஜினீயரிங், பிலிம் எடிட்டிங், திரைக் கதை, வசனம், இயக்கம், டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு ஆகிய பாடப் பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இதில் பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம்.

இதில் ஒளிப்பதிவு, பிலிம் பிராசசிங் ஆகிய படிப்புகளில் சேர மட்டும் இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். பிலிம் எடிட்டிங் படிப்பில் பிளஸ் 2 எந்த பிரிவு மாணவர்களும் சேரலாம்.

திரைக்கதை, வசனம், டைரக்ஷன், டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு படிப்புக்கு பட்டப்படிப்பு அவசியமாகும்.

மேற்கண்ட படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 18-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூன் மாதம் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், கூடுதல் விவரங்கள் அறிய விரும்புவோர் 044-22542212 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+