ராஸ் அல் கைமாவில் கவிதை நூல் வெளியீட்டு விழா: சேமுமு வெளியிட்டார்
ராஸ் அல் கைமா: துபாயில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஸ் அல் கைமா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 9-ம் தேதி மாலை நடந்தது.
இந்த விழாவில் கவிஞர் மலிக்கா அவர்கள் எழுதிய 'உணர்வுகளின் ஓசை" நூலை இனிய திசைகள் ஆசிரியர் சேமுமு அவர்கள் வெளியிட ராசல்கைமா கார்ஸ் நிறுவன மேலாளர் ஹபீபுல்லாஹ் முதல் பிரதியினை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கீழை முஸப்பிஹு, பரமக்குடி முனவர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சேமுமு-வுக்கு பரமக்குடி முனவர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலி அவர்கள் தனது வாழ்த்துரையில் நான்காம் வகுப்பே படித்த ஒரு சகோதரி இத்தகைய கவிதை நூலை படைத்திருப்பது பாராட்டுக்குரியது. அவர் இதேபோன்று பல படைப்புகளை வெளியிட வேண்டும் என்று வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் கவிதை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications