நெல்லையில் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸார்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நெல்லை, குமரி போன்ற கல்வியறிவு அதிகம் பெற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் இத்தகைய சம்பவங்கள் நடந்ததில்லை. எனினும் சில இடங்களில் இதுபோன்ற திருமணங்கள் அதிகாரிகள் கண்களுக்கு தப்பி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சைல்டு லைன் அமைப்புக்கு பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியில் இருந்து போன் வந்தது. அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், அதனை தடுத்து நிறுத்தும்படியும் போனில் பேசியவர் தெரிவித்தார். இதையடுத்து நெல்லை சரணாலயம், சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் அதிகாரிகள் குழு பேட்டைக்கு சென்று விசாரித்தது. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த அந்த சிறுமி வினோ. அவர் அப்பகுதியில் உள்ள மநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள். அப்பகுதி மக்கள் வழக்கப்படி அவரது உறவுக்கார வாலிபருக்கு சிறுமி வினோவை திருமணம் பேசி முடிக்க நிச்சயித்தனர்.
மணமகள் வினோவை விட ஓன்றரை மடங்கு வயதானவர், திருமணமாகி மனைவியை பிரிந்தவர் என்பதுதெரிய வந்தது. இதையடுத்து சரணாலயம், சைல்டு லைன் ஊழியர்கள் பெற்றோருக்கு அறிவுரை கூறி அம்முயற்சியை முறியடித்தனர். அதன் பின்னர் சிறுமி பேட்டை பள்ளிக்கு சென்று படித்தார். இந்நிலையில் வருகிற 6ம் தேதி திங்கள்கிழமை மீண்டும் சிறுமிக்கு திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டதாக சைல்டு லைனுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதுபற்றி சைல்டு லைன் அமைப்பு சார்பில் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுமி வினோவின் பெற்றோரிடம் உரிய வயதை அடையும் முன்பு திருமணத்தை நடத்தி வைக்க மாட்டோம் என உறுதிமொழி வாங்கினர். சிறுமியை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பவும் சம்மத்தினர். இதுபற்றி விபரம் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் குழந்தை நல குழுமத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்ததில் வடமாவட்டங்களை போன்று நெல்லை மாவட்டத்திலும் குழந்தை திருமணங்கள் அடிக்கடி நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications