குவைத்தில் வெள்ளி மேடை: தமிழில் ஜும்ஆப் பேருரை
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் குவைத்தில் வெள்ளிதோறும் தமிழில் ஜும்ஆப் பேருரை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(K-Tic) கடந்த 7 ஆண்டுகளாக குவைத்தில் சமூக, சமய, சன்மார்க்கப் பணிகளை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் சிறப்பான முறையில் செய்து வருகிறது. அது குவைத் அரசாங்கத்தின் அவ்காஃப் /இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் ஆகியவற்றின் அனுமதியுடன் 29.07.2011 அன்று முதல் குவைத்தில் ஃகைத்தான் என்ற பகுதியில் முதன்முறையாக தமிழில் ஜும்ஆப் பேருரை(குத்பா)யை தொடங்கியது.
அன்று முதல் வெள்ளிதோறும் தமிழில் ஜும்ஆப் பேருரை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் முகவரி:
அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல்,
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில்,
ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில்,
ஃகைத்தான்
வாரந்தோறும் ஜும்ஆப் பேருரைகளையும், ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு குறிப்பிட்ட தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுகளையும் திறமையான தமிழ் இஸ்லாமிய அறிஞர் (ஆலிம் / உலமா) பெருமக்கள் நிகழ்த்துவார்கள். இன்பத் தமிழில் இஸ்லாம் இயம்பும் இனிய கருத்துக்களை செவிமடுத்து, இதயங்களில் பதிய வைத்து, வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி, ஈருலுக வாழ்விலும் வெற்றி பெற குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கொள்கை வேறுபாடின்றி, கருத்து முரண்பாடின்றி வருகை தந்து சத்தியப் பாதையில் நடக்க குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) அன்புடன் அழைக்கின்றது.
குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்து தெரிவிக்குமாறும், சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர்.
மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: [email protected] / [email protected]
யாஹு குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
இணையதளம்: www.k-tic.com


Click it and Unblock the Notifications
