கிழங்கு வகை காய்கறிகளில் உள்ள சத்துக்கள்

உணவே மருந்து என்பது ஆன்றோர் வாக்கு மண்ணில் விளையும் காய்கறிகள் மகத்தான சத்துக்களை கொண்டுள்ளது. பூமிக்கடியில் புதையலாய் பொதிந்து கிடக்கும் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் பற்றிய தகவல்கள்:
வேரில் சத்துக்களை சேமிக்கும் கிழங்குவகை காய்கறிகள் மாவுச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளன. இவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும், மாவுப்பொருளின் அளவையும் சம நிலையில் வைப்பதில் உதவி புரிகின்றன. தினமும் உட்கொள்ளும் காய்கறிகளில் உள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
உருளைக்கிழங்கு: உலகின் பெரும்பாலான மக்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் உருளைக்கிழங்கில் அரிசியில் உள்ளதை விட அதிகமான சத்துக்கள் உள்ளன. இதில் மாவுச்சத்தும் உயிர் சத்துக்களும் உள்ளன. இரும்பு மற்றும் புரதச்சத்தும் இந்த கிழங்கில் காணப்படுகின்றன.
பீட்ரூட்: இனிப்புதன்மை அதிகம் கொண்ட இந்த காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதிக அளவு குளுக்கோஸ் சத்து நிறைந்தது. ரத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு.
கருணைக்கிழங்கு: காரும் கருணை காரா கருணை என இரு வகை உண்டு. பிடிகிழங்கு காரும் தன்மையுடையது. காராக்கருணை சேனைக்கிழங்கு வகையைச்சார்ந்தது. இதில் வைட்டமின் சத்துக்களும், மாவு மற்றும் புரதச்சத்துக்களும் உள்ளன.
சேப்பைக்கிழங்கு: நான்கு வகை சேப்பைக்கிழங்குகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ.பி. என்ற உயிர்சத்தும் இரும்பு மற்றும் புரதச்சத்தும் உள்ளன.
மரவள்ளிக்கிழங்கு: இனிப்புச்சுவை நிறைந்த இந்த கிழங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. புரதம், கால்சியம் சத்துக்கள் இதில் உள்ளன.
பனங்கிழங்கு: சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இந்த கிழங்கில் புரதச்சத்தும், சில உயிர்சத்துக்களும் உள்ளன. மலச்சிக்கலைப்போக்கும், பசியை அதிகரிக்கும்.
வாழைக்கிழங்கு: வாழைத்தண்டுக்குள்ள மருத்துகுணம் இதற்கு உண்டு சிறுநீரகம் தொடர்பான தொல்லைகள் நீங்கும். சிறுநீரிலும், வயிற்றிலும் தங்கியுள்ள கற்களை கரைத்துவிடும் ஆற்றல் இந்த கிழங்கிற்கு உண்டு.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications