ரூ. 23ல் திருப்பதி-சென்னை ரயி்ல் சேவை துவக்கம்: மக்கள் மகிழ்ச்சி
சென்னை: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ. 23 கட்டணத்தில் சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் புதிய ரயில் சேவை நேற்று துவங்கியது.
மத்திய ரயில்வே பட்ஜெட்டில், தெற்கு ரயில்வே சார்பில் 9 புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 9 புதிய ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சென்ட்ரல்-திருப்பதி, சென்னை-நெல்லூர் ரயில்களை மூத்த பணியாளர் ஒருவர் கொடியசைத்து, துவக்கி வைத்தார்.
அப்போது ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தற்போது துவக்கப்பட்டுள்ள சென்னை சென்ட்ரல்-திருப்பதி மின்சார ரயில், அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். காலை 7.05 மணிக்கு புறப்பட்டு 11.10 மணிக்கு திருப்பதி சென்றடையும். வெறும் 23 ரூபாய் கட்டணத்தில் இந்த ரயிலில் திருப்பதிக்கு செல்ல முடியும் என்றார்.
இதே போல, திருப்பதி-நெல்லூர்(66033), நெல்லூர்-திருப்பதி (66034), நெல்லூர்- சென்னை சென்ட்ரல் (66036), சென்னை-ஆவடி (66003), ஆவடி-சென்னை (66004), ஆவடி-சென்னை சென்ட்ரல் (66002), திருப்பதி-சென்னை சென்ட்ரல் (66014) ரயில்களும் நேற்று முதல் இயங்க ஆரம்பித்தன.












Click it and Unblock the Notifications