'மெழுகுவர்த்தி' தீபாவளிக்குத் தயாராகும் தமிழகம்!

தீபாவளி என்றாலே வெடிகள் வெடிப்பது என்பது தான் எல்லாரது நினைவிலும் வருகிறது. அதுமட்டுமல்ல நண்பர்கள், உறவினர்களுடன் வீடுகளில் விருது, கொண்டாட்டம் என எண்ணற்ற நிகழ்ச்சிகள் உண்டு.
கொண்டாட்டம் ஒருபுறம் மகிழ்ச்சி தான் என்றாலும், மற்றொரு புறம் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய மின்தடை தான் மக்கள் நினைவில் நின்று பீதியை கிளப்புகிறது. தமிழக மக்களை பாடாய் படுத்தும் மின்தடையால் வெறுத்து போன மக்கள் தி.மு.க. அரசை எதிர்கட்சியாக கூட அமர முடியாதபடி தோற்கடித்தனர்.
புதிய ஆட்சி வரும் போது இந்த தொடர் மின் தடைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என மக்கள் எண்ணினர். ஆனால் தற்போதைய ஆளுங்கட்சியினாலும், மக்களின் தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் முடியாமல், அதை விநியோகிக்கவும் முடியாமல் தவிக்கிறது.
தீபம் வைத்துக் கொண்டாடும் தீபாவளியை, மெழுகுவர்த்தியை கொண்டு கொண்டாட வேண்டிய நிலை வருமோ என்ற அச்சம் மக்கள் மனதில் இல்லாமல் இல்லை. பண்டிகை நாட்களில் சாதாரண நாட்களை காட்டிலும், மின்சார பயன்பாடு அதிகரிக்கும் என்பது, தமிழக அரசுக்கு மேலும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளது.
மின்சார உற்பத்திக்காக தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்கள் கடுமையாக போராடி தான் வருகின்றன என்பது தமிழக மக்களுக்கு ஆறுதல் செய்தி. பண்டைய காலம் தொட்டே ஆசிய கண்டத்தில் தீபாவளி கொண்டாடியதற்கான பல ஆதாரங்கள் உள்ள நிலையில், இருட்டில்.. தீபாவளி கொண்டாடியதாக வரலாறு இல்லை.
ஒரு வேளை வரலாறு இந்த முறை மாற்றி எழுதப்படுமா...?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications