கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கடைசி நாள் டிச.30
சென்னை: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதினை பெற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஒரு சாதி, இனம், வகுப்பை சேர்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பை சேர்ந்தவர்களையோ அல்லது அவர்களின் உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றுவோரின் உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று பேருக்கு ரூ.20,000, ரூ.10,000, ரூ.5,000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
2012ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு தேவையான ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் மூலமாக செயலாளர், பொதுத்துறை, தலைமைச்செயலகம், சென்னை-9'' என்ற முகவரிக்கு வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசால் அமைக்கப்படும் தேர்வுக்குழு விருதுக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்யும். அவர்களுக்கு குடியரசு தினத்தன்று முதல்வர் விருது மற்றும் பதக்கம் வழங்கி கவுரவிப்பார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications