கோடை விடுமுறை: குவியும் சுற்றுலா பயணிகளால் திணறும் ஊட்டி
ஊட்டி: கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து சில நாட்களேனும் தப்பிக்கவும், கோடை விடுமுறையை அனுபவிக்கவும் ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வார இறுதி விடுமுறை மற்றும் மே தின விடுமுறையையொட்டி கடந்த இரு நாட்களில் மட்டும் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 42 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்தனர். முக்கியமான சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கோத்தகிரி சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூட இடம் இல்லை. ஊட்டிக்கு வரும் லாரி போன்ற கனரக வாகனங்கள் லவ்டேல் சந்திப்பில் இருந்து மஞ்சகொரை வழியாக ஊட்டிக்கும், கூட்செட் சாலை வழியாக கூடலூருக்கும் திருப்பி விடப்படுகிறது.
என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் சாலையில் இருமங்கிலும் அணிவகுத்து நிற்கும் வாகன நெரிசலை சமாளிக்க முடியவில்லை. இதற்கு வாகன ஓட்டிகள் சாலை விதிகளைக் கடைப்பிடிக்காததும் ஓர் காரணம். இடது ஓரமாக ஒன்றன் பின் ஒன்றாக மலையேறும் வாகனங்கள் சென்றால்தான் சிக்கலில்லாமல் செல்ல முடியும். ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் வலது பக்கம் ஏறிச்செல்வதால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது என்று காவல்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
பயணத்தின் போதே விதிகளை காற்றில் பறக்கவிடும் பயணிகள் ஊட்டியில் தங்கி இருக்கும் காலத்தில் என்னென்ன சூழல் சீர்கேட்டினை உருவாக்குவோர்களோ என்பது சூழலியலாளர்களின் கவலையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு சீசனின் போதும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொட்டுகிறார்கள். இயற்கையை அனுபவிக்க வாருங்கள், சீரழிக்க வராதீர்கள் என்பதே இவர்களது கோரிக்கையாக இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications