டஸ்கானா - க்ரிப்டாஸுக்கு 'ஆசியாவின் சிறந்த உணவகங்கள்' விருது!

Subscribe to Oneindia Tamil

Tuscana and Kryptos becomes best in the world
விபின் சச்தேவ் நடத்தும் சர்வதேச ஸ்டைல் உணவகங்களான டஸ்கானா மற்றும் க்ரிப்டாஸுக்கு ஆசியாவின் சிறந்த உணவகங்கள் என்ற விருதினை சிங்கப்பூரைச் சேர்ந்த மிலே கில்ட் அமைப்பு வழங்கியுள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில் சப்வே, டஸ்கானா, க்ரிப்டாஸ் என வெரைட்டியான உணவகங்களை விபின் சச்தேவ் நடத்திவருகிறார். சர்வதேச உணவுகள் அனைத்தும் இந்த ரெஸ்டாரண்ட்களில் கிடைக்கின்றன. பல திரையுலக பிரபலங்கள் இந்த உணவகங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

ஏற்கெனவே டைம்ஸ் ஆப் இந்தியாவின் சிறந்த உணவகத்துக்கான விருதினை டஸ்கானா பெற்றுள்ள நிலையில், இப்போது சர்வதேச விருதும் கிடைத்துள்ளது.

உலக அளவில் சிறந்த உணவகங்களை தரவரிசைப்படுத்தி பட்டியலிடும் பிரபலமான அமைப்பு மிலே கில்ட். சிங்கப்பூரில் உள்ள இந்த நிறுவனம் இந்த ஆண்டு ஆசியாவின் சிறந்த உணவகங்கள் என டஸ்கானாவையும் க்ரிப்டாஸையும் தேர்வு செய்துள்ளது.

உணவின் தரம், சுவை, உணவகத்தின் சூழல், பரிமாறும் முறை, வாடிக்கையாளர்களிடம் பணியாளர்களின் அணுகுமுறை என பல்வேறு அளவுகோள்களின் அடிப்படையில் இந்த விருதினை மிலே கில்டு அறிவித்துள்ளது.

இதுகுறித்து உணவகங்களில் நிர்வாக இயக்குநர் விபின் சச்தேவ் மற்றும் தலைமை செப் வில்லி கூறுகையில், "இது ஒரு அரிய பெருமை. இதற்காகத்தான் இத்தனை பாடுபட்டோம். வாடிக்கையாளர்கள் மற்றும் எங்களது பணியாளர்களின் துணையின்றி இது சாத்தியமில்லை. அவர்களுக்கு என் நன்றிகள். ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் வாடிக்கையாளர்கள் தரும் அபார ஆதரவுதான் எங்கள் சேவையை மேலும் மேலும் தரமுள்ளதாக்குகிறது.

இந்த உணவகங்களின் தலைமை செஃப் வில்லி இத்தாலியைச் சேர்ந்தவர். இத்தாலிய உணவுகளில் ஸ்பெஷலிஸ்ட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+