மாநில உருது அகாதெமி குழு மாற்றியமைப்பு: கருணாநிதி

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உருதுமொழியின் வளர்ச்சிக்காக, கடந்த 2000ம் ஆண்டு "தமிழ்நாடு மாநில உருது அகாதெமி'' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அகாதெமியின் ஆட்சிக்குழு கடந்த 2007ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது.
இப்போது குழுவில் உள்ள உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளதால் உருது அகாதெமியின் ஆட்சிக் குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆட்சிக் குழுத் தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தில் பன்மொழி அகராதித் திட்ட உறுப்பினராகப் பணியாற்றிய ஏ.எஸ்.சஜ்ஜத் புஹாரி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான், சென்னை பல்கலைக்கழக பெர்சியன் மற்றும் உருது மொழித் துறைத் தலைவர் நிஸார் அகமது, திருச்சி ஜமால் முகமது கல்லூரி உருது மொழித் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் பி.அகமது பாஷா, கிருஷ்ணகிரி முக்தார் பத்ரி, வாணியம்பாடி முகம்மது யாகூப் அஸ்லாம், சென்னை மீயாஸி உருது அகாதெமி தலைவர் முகம்மது அஷ்ரப், கோவை அஞ்சுமன்-இ-உருது நிறுவனச் செயலாளர் சையத் பைய்ஸ் காதிரி,
சென்னை மாலிக்குல் அசீஸ், சென்னை புதுக்கல்லூரி உருதுத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ்.மசாஃபருதீன், சென்னை கே.எம்.அஷ்பகூர் ரகுமான், கோவை கலீம், சென்னை அலீம் சபா நவீதி, சென்னை பல்கலைக்கழக உருதுத் துறை பேராசிரியர் சஜ்ஜத் உஸ்ûஸன், வாணியம்பாடி மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக கல்வி மையப் பொறுப்பாளர் சுகைல் அகமது, சென்னை எஸ்.ஐ.இ.டி., மகளிர் கல்லூரி உருது மொழித் துறை தலைவர் ஷஹீரா உம்மே ஷஹலா ஆகிய 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications