ரூ.63 லட்சம் மதிப்பிலான பணிகளை முடிந்தது- வேடந்தாங்கல் சீசனுக்கு ரெடி
மதுராந்தகம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான முக்கிய பணிகள் செய்து முடித்து, சீசனை வரவேற்க சரணாலய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் இங்கு சீசன் துவங்குகிறது. சீசனில் பல ஆயிரக்கணக்கான கி.மீ.,களை கடந்து வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகள், இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. அதன்பின் குஞ்சுகள் பறக்கும் தன்மையை பெற்றவுடன் அவை சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றன.
மொத்தம் 73 சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் ஏரியில் நிலவும் தட்பவெப்பநிலை வெளிநாட்டு பறவைகளுக்கு இனம்பெருக்கம் செய்ய தகுந்ததாக உள்ளன. சீசன் துவங்கும் முன், வெளிநாட்டு பறவைகள் வந்து கூடு கட்ட தேவையான தகவமைப்பை, சரணாலய அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.
பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டு, ஏரியில் பறவைகளின் இரைக்காக மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. இந்தாண்டு 63 லட்சம் ரூபாய் மதிப்பில் சீசனை வரவேற்க தேவையான பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் சீசன் நாட்களில், பறவைகள் மற்றும் இயற்கை அமைப்பை கண்டு களிக்க வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உயர்ந்த தொலைநோக்கியுடன் பார்வையாளர் கோபுரம், ஏரிக்கரையில் நடந்த செல்லும் வகையில், கல்பதிக்கப்பட்டு, 40 இருக்கைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நவீன கழிப்பிட வசதி, குடிநீர் தொட்டி, பயணிகள் கருத்து விளக்க மையம் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக சுற்றுலா துறையின் சார்பில், பறவைகள் விளக்கப்படம், தொடுதிரையில் தொடப்படும் 30 பறவைகளின் ஒலியை கேட்கும் வசதி உள்ளது.
வேடந்தாங்கல் பறவைகளின் சரணாலயத்தை கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், சராணாலயத்தை பராமரித்து வரும் வனத்துறைக்கு பார்வையாளர்கள் மூலம் நல்ல வருவாயை கிடைக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications