துபாய் தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்க வந்த மொரீஷியஸ் முன்னாள் அமைச்சருக்கு வரவேற்பு

துபாய் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழா வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் மொரீஷியஸ் முன்னாள் அமைச்சரும், யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குநருமான ஆறுமுகம் பரசுராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதற்காக அவர் கடந்த 28ம் தேதி இரவு துபாய் வந்தார். துபாய் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்திமாலா சுரேஷ், துணை தலைவர் ஏ. லியாக்கத் அலி ஆகியோர் பரசுராமனுக்கு மலர்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் துபாய் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் சி. ஜெகந்நாதன், பொருளாளர் கீதா கிருஷ்ணன், துணைப் பொருளாளர் சுந்தர், பொழுதுபோக்குத் துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, கமிட்டி உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், விஜயேந்த்திரன், விஜயராகவன், பிரசன்னா மற்றும் வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தனக்கு சிறப்பான வரவேற்பளித்த துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications