குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் சார்பில் குவைத்தில் புனித ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி
புனித ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினை 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
தமிழ் பேசும் இஸ்லாமியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஆண்டு தோறும் இந்த நிகழ்சியினை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு புனித ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி வரும் 15-ம் தேதி ஸால்மியாவில் உள்ள மர்ஹூம் அப்துல்லா அல் மஹ்ரீ பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை மாலை தொழுகையைத் தொடர்ந்து நடைபெற உள்ளது.
விழாவை குவைத் இஸ்லாமிய தமிழ் சங்கத்தின் தலைவர் மவ்லவி அஷ்ஷைஃக் எம்.எஸ் முகம்மது மீராஷா பாஜில் பாகவி தலைமை ஏற்று நடத்துகிறார். இதில் சங்கத்தின் துணைத்தலைவர்கள் மவ்லவி ஹாஃபில் காரீ அஷ்ஷைஃக் எம். முகம்மது நிஜாமுதீன் பாகவி, மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபீதீன் பாகவி, காஷிஃபி ஜமா அ(த்)துல் உலமா குழுவின் மவ்லவி காரீ அஷ்ஷைஃக், S.A.K.Md. இப்ராஹீம் நூரானி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இச்சிறப்புமிகு நிகழ்வில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் உற்றார், உறவினர்களுடன் பங்கேற்று பயனடையுமாறு அழைக்கப்படுகின்றனர். பெண்களுக்கு தனி இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குவைத் மற்றும் அரபு நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக குவைர் தமிழ் இஸ்லாமிய சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விபரங்களுக்கு...
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
இணையதளம்: www.k-tic.com
மின்னஞ்சல் முகவரிகள்: [email protected]/ [email protected]
யாஹு குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications