ஐதராபாத்தை வலம் வரப்போகும் உலகக்கோப்பை கார்

இந்தியாவில் நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உலககோப்பை போட்டிகளையொட்டி பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தின. மேலும, உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கென சிறப்பு விளம்பரங்களையும் தயாரித்து ஒளிபரப்பி வருகின்றன.
இந்நிலையில், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறியுள்ளது.
இதன் எதிரொலியாக, ஐதாராபாத்தை சேர்ந்த வாகன மறுவடிவமைப்பு வல்லுனர் சுதாகர் உலகக்கோப்பையின் வடிவத்தில் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். 6 அடி விட்டத்திலும், 11 அடி 10 இஞ்ச் உயரத்திலும் இந்த காரை அவர் வடிவமைத்துள்ளார்.
ஒருவர் மட்டுமே அமரும் இருக்கை வசதிகொண்ட இந்த காரில், 150 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கார் மணிக்கு அதிகபட்சம் 70 கி.மீ., வேகத்தில் செல்லும் என அவர் தெரிவிக்கிறார்.
இதில், ஆச்சரியப்படவேண்டிய விஷயம், உலகக்கோப்பை காரை அவர் 36 மணி நேரத்தில் உருவாக்கியுள்ளார். காரை உருவாக்கும் பணியில் அவருக்கு 16 இளம் வடிவமைப்பாளர்களும் துணைபுரிந்துள்ளனர். இந்த காரை தயாரிக்க ரூ.13,000 செலவானதாக சுதாகர் தெரிவித்தார்.
உலகக்கோப்பையின் மெகா சைஸ் உருவமாக தெரியும் இந்த கார் ஐதராபாத்திலுள்ள கன்ட்ரி கிளப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மூன்று சக்கரங்கள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தாலும், கார் என்றே செல்லமாக அழைக்கிறார் சுதாகர்.
இந்த காரை பார்வையிட வந்த கிரிக்கெட் ரசிகர்கள்," உலகக்கோப்பை தற்போதே இந்தியா வசம் வந்துவிட்டது போன்ற உணர்வை தருகிறது," என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:படங்கள் India vs Srilanka
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications