2013ல் இருந்து நான் பொய் சொல்ல மாட்டேன்... நீங்க சபதம் எடுக்குறீங்களா?
ஒவ்வொருவருக்கும் ஒரு சில பழக்கங்கள் இருக்கும். சிலது நல்லதாக இருக்கும். சில பழக்கங்கள் கெட்டதாக இருக்கும். நல்ல பழக்கத்தை நல்லபடியாக தொடரலாம். ஆனால் கெட்டப்பழக்கத்தை விட்டு ஒழித்தே ஆகவேண்டும்.
நம்ம கிட்ட இருக்கிற கெட்ட பழக்கத்தாலே எத்தனை பேருக்கு பாதிப்பு வருது. குடும்பம், குழந்தைகள் கூட பாதிக்கப்படுறாங்க. இதை விட்டே ஆகனும் என்று முடிவு செய்திருக்கிறீர்களா? இதோ பிறக்கப்போகுது 2013 புத்தாண்டு. என்னென்ன கெட்டப் பழக்கத்தை விடலாம்னு நிபுணர்கள் ஆலோசனை சொல்லியிருக்காங்க. உங்ககிட்ட இந்த கெட்டப் பழக்கங்கள் இருந்தால் நீங்களும் சபதம் எடுத்துக்கலாமே.

உணவை வீணாக்க மாட்டேன்
இன்றைய இளம் தலைமுறையினர் பசிக்கு சாப்பிடுவதை விட ருசிக்கே சாப்பிடுகின்றனர். ஹோட்டல்களில் பார்ட்டி, நண்பர்களுடன் விருந்துக்கு போகும் போகும் போது அளவிற்கு அதிகமாக ஆர்டர் செய்து சாப்பிட முடியாமல் பின்னர் வீணாக்கிவிடுகின்றனர். ஒவ்வொரு பருக்கை உணவும் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டது என்பார்கள். இனிமேல் உணவை வீணாக்க கூடாது என்று சபதம் எடுக்கலாம்.

தேவையானதை மட்டுமே வாங்குவேன்
பணம் இருக்கிறது என்பதற்காக கண்டதையும் வாங்கி வீட்டை நிரப்புபவர்கள் இன்றைக்கு இருக்கின்றனர். எனவே பணத்தை வீணாக்காமல் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவேன் என்று சபதம் எடுக்கலாம்.

அதிகாலையில் எழுவேன்
நள்ளிரவு வரை முழித்து டிவி பார்ப்பது, ஃபேஸ்புக்கில் சாட் செய்வது என இளைய தலைமுறையினரின் பழக்க வழக்கம் மாறிவருகிறது. இதனால் காலை 8 மணிவரைக்கும் படுக்கையில் கிடக்கின்றனர். இந்த பழக்கத்தை மாற்றி அதிகாலையில் சீக்கிரம் எழுவேன் என்று சபதம் எடுக்கலாம்.

வேலையை பாக்கி வைக்காதீர்கள்
எந்த வேலை கொடுத்தாலும் நாளைக்கு பார்க்கலாம் என்று சிலர் ஒத்திப்போடுவார்கள். இது தவறான பழக்கம். அந்தந்த வேலையை அவ்வப்போது முடித்துவிட்டால் சுமை சேராது. எனவே வரும் புத்தாண்டு முதல் அன்றாட வேலைகளை பாக்கி வைக்காமல் முடித்துவிடுவேன் என்று சபதம் எடுக்கலாம்.

வீட்டு வேலைகளில் சுத்தம்
ஒரு சிலரது சமையல் அறைக்குள் நுழைந்தால் சிங்க் நிரம்பி வழியும். இரவில் போட்டது போட்டபடி படுத்துவிடுவார்கள். காலையில் எழுந்தால் சமையலறை நாற்றம் அடிக்கும். இரவில் நன்றாக கழுவி வைத்துவிட்டால் காலையில் வேலையை புத்துணர்ச்சியோடு தொடங்கலாம். எனவே இனிமேல் வீட்டு சமையலறையை சுத்தமாக வைத்திருப்பேன் என்று பெண்கள் சபதம் ஏற்கலாம்.

ஜங்க் ஃபுட் தொடமாட்டேன்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் பர்கர், பீட்ஸா போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிட்டது. வீட்டில் செய்யும் சத்தான உணவுகளை உண்பதை விடுத்து கண்டதையும் தின்று உடல் கொழுத்துப்போகின்றனர். எனவே இந்த புத்தாண்டு முதல் ஜங் ஃபுட் தொடமாட்டேன் என்று சபதம் ஏற்கலாம்.

நேரத்தை வீணாக்கமாட்டேன்
காலம் பொன் போன்றது என்பார்கள் ஆனால் இது இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவதில்லை. நெட், சாட், செல்போன் என நேரத்தைக் கொல்வதற்கு அவர்களுக்கு நிறைய விசயங்கள் இருக்கிறது. எனவே வரும் புத்தாண்டு முதல் காலத்தை வீணாக்காமல் உருப்படியாக வேலைகளை செய்வேன் என்று சபதம் எடுக்கலாம்.

ஃபேஸ்புக்கில் போட்டோ போடமாட்டேன்
கேமரா உடன் செல்போன் வந்தாலும் வந்தது ஆள் ஆளுக்கு போட்டோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்து லைக் கேட்கின்றனர். இளம் பெண்கள் பலருக்கு இந்த விசயத்தில் அடிமையாகிக் கிடக்கின்றனர். தினசரி ஏதாவது ஒரு போட்டோ எடுத்து அதை அப்லோட் செய்கின்றனர். இதுவும் ஒரு கெட்டப்பழக்கம்தான். நம்முடைய போட்டோவை டேக் செய்ய வாய்ப்புள்ளது. எனவே இனிமேல் போட்டோ எடுத்து அப்லோட் செய்யமாட்டேன் என்று சபதம் எடுக்கலாம்.

பொய் சொல்ல மாட்டேன்
பொய் சொல்வது மிகப்பெரிய கெட்டப்பழக்கம். பெரியவர்கள் பொய் சொன்னால் அதைப் பார்க்கும் சிறுவர்களும் பொய் சொல்லக் கற்றுக்கொள்கின்றனர். எனவே வரும் புத்தாண்டு முதல் பொய் சொல்ல மாட்டேன் என்று சபதம் ஏற்கலாம்.

போதையை விட்டொழிப்போம்
மது, புகை, போதைப்பழக்கம் அதை உபயோகிப்பவர்களை மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவரையும் பாதிக்கும். எனவே உடல் நலனையும், மனநலனையும் பாதிக்கும் மதுப்பழக்கத்தை வரும் புத்தாண்டு முதல் தொடமாட்டேன் என்று முக்கிய சபதம் எடுக்கலாம்.
இதில் உள்ள கெட்டப்பழங்கள் உங்களுக்கு இருந்தால் ஒரே நாளில் எல்லாவற்றையும் விட முடியாது படிப்படியாக விட்டுவிட முயற்சி செய்யலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications