For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளைச் சேலையை எப்படிக் கட்டணும் தெரியுமா...?

Google Oneindia Tamil News

Namitha
பாரதிராஜா படத்தில் பார்த்திருக்கலாம், வெள்ளுடை தேவதைகள் பாட்டின்போது சிட்டுக் குருவி போல பறப்பார்கள், சிறகடித்து கலக்குவார்கள். வெள்ளைச்சேலை பெண்களின் மிடுக்கையும், கவர்ச்சியையும் மேலும் கூட்டித் தர உதவும் என்பார்கள். பெண்களுக்கு எந்த சேலை கட்டினாலும் அழகுதான். ஆனாலும் வெள்ளை, சிவப்பு, கருப்பு போன்ற நிறச் சேலைகளில் பெண்கள் தித்திக்கும் அழகுடன் காட்சி தருவார்கள்.

இதில் வெண்மை நிறம் என்பது பெண்களுக்கு தேவதை கோட் அடித்து கலகலக்க வைக்கும். வெள்ளைச் சேலைகளை பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. காரணம், அது கணவனை இழந்த பெண்களுக்கான நிறம் என்பது நீண்ட காலமாக நிலவி வந்த மூடப் பழக்கத்தால். ஆனால் இன்றுள்ள பெண்கள் வெள்ளை நிறச் சேலைளை விரும்பி அணிகிறார்கள். அதிலும் கலர் கலராக பார்டர் வைத்த வெள்ளைச் சேலைகளுக்கு நல்ல மவுசும் உள்ளது.

தங்களை ரிச்சாக காட்டும் என்பதாலும், கெளரவமான தோற்றத்தைக் கொடுக்கும் என்பதாலும், கவர்ச்சிகரமாக தோன்ற உதவும் என்பதாலும் வெள்ளை நிறத்திற்கு பெண்கள் கூட்டம் ஜேஜே போட்டுக் கொண்டிருக்கிறது.

சரி வெள்ளைச் சேலைகளை எப்படி அணிந்தால் அழகைக் கூட்டலாம் என்பது குறித்துப் பார்ப்போமா...

தங்க நிற பார்டருடன் கூடிய வெள்ளைச் சேலைகளை அணியும் போது தனி மிடுக்கு வந்து சேருகிறது.

அதேபோல சீ த்ரூ சேலைகளுக்கு கவர்ச்சி கூடுதலாக கிடைக்கும். அதற்கேற்ற பிளவுஸ் அணிய வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட சேலைகளை கரீனா கபூர் அடிக்கடி கட்டி ரசிகர்களை அலைக்கழிப்பதைப் பார்த்திருக்கலாம் படங்களில். இப்படிப்பட்ட சேலைகளை அணியும்போது அதிக அளவில் நகைகளை போட்டு பூட்டிக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. மேலும், கழுத்தில் எதுவும் இல்லாமல் வெறுமனே விடுவது கவர்ச்சியைக் கூட்டிக் காட்டும்.

கருப்பும், வெள்ளையும் கலந்த சேலைகளுக்கு இன்னும் கூடுதல் கவர்ச்சி கிடைக்கும். இந்த காம்பினேஷன் எப்போதுமே தப்பாகப் போனதில்லை. அதாவது மாறுபட்ட இரு கலர்களை சேர்க்கும்போது அதற்கு தனியான விசேஷம் கிடைக்கிறது.

மற்ற சேலைகளை விட வெள்ளை நிறச் சேலைகளை அணிவது என்பது தனி கலையாகும். சரியான டிசைனில், சரியான விதத்தில் இப்படிப்பட்ட சேலைகளைத் தேர்வு செய்து அணியும்போது தனி மிடுக்கும், கவர்ச்சியும் தானாக வந்து உட்காரும்.

நீங்க எப்ப பாரதிராஜா தேவதையாகப் போறீங்க...?

English summary
On a global scale, white is the colour of purity that is worn by brides and thus it has becomes a colour of celebration. It is also the colour of serenity and calm. These days, a white saree is one of the most eternal fashion statement. The best way to be fashionable, is to copy your favourite celebrities. Check out some of the most fashionable celebrities who draped a white saree and take tips from them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X