மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் 'சிக்ஸ் பேக் படை'!

கவர்ச்சியான பெண்கள் மீது ஆண்களுக்கும், கட்டுமஸ்தான ஆண்கள் மீது பெண்ளுக்கும் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையானது. இந்த அடிப்படையைப் பயன்படுத்தித்தான் ரீதிங் அமைப்பு இந்த வித்தியாசமான முயற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாம்.
விஷயம் ரொம்ப சிம்பிளானது. ரீதிங் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ள 'Your Man Reminder' என்ற ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உங்களது ஸ்மார்ட் போனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதைப் பயன்படுத்தும்போது ஒரு டாக்டர் தோன்றி மார்பகப் புற்றுநோய் குறித்து விளக்கம் அளிப்பார்.
பின்னர் ஆறு சிக்ஸ் பேக் ஆண்களின் பட்டியல் அதில் இடம் பெறும். அதில் பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒருவரைத் தேர்வு செய்யலாம். அப்படித் தேர்வு செய்யும்போது, அந்த நபர் திரையில் தோன்றுவார். பின்னர் மேலாடை இல்லாமல், கட்டுமஸ்தான தோற்றத்தைக் காட்டியபடி வரும் அவர் பெண்களுக்கு மார்பகப் பராமரிப்பு, புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, எளிய வழிமுறைகள் உள்ளிட்டவற்றைப் பற்றி எளிதான வார்த்தைகளில் விளக்குவார்.
இதுதான் இந்த 'Your Man Reminder' அப்ளிகேஷன் மூலம் ரீதிங் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ள மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு விளம்பரமாகும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
இதுகுறித்து கனடாவைச் சேர்ந்த இந்த அமைப்பைச் சேர்ந்த ஆலிசன் கார்டன் கூறுகையில், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை எளிய முறையிலும், வேடிக்கையான முறையிலும் சொல்ல நினைத்தபோது உருவானதுதான் இந்த ஐடியா.
கட்டுமஸ்தான ஆண்கள் மீது குறிப்பாக சிக்ஸ் பேக் கொண்ட ஆண்கள் என்றால் பெண்களுக்கு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும். எனவே சிக்ஸ் பேக் கொண்ட ஆணை விட்டே மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடம் சொல்லும்போது நிச்சயம் காது கொடுத்துக் கேட்பார்கள் என்று நினைத்தோம். எங்களது எண்ணம் வீண் போகவில்லை. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யூடியூபிலும் இது செமத்தியான ஹிட்டாகியுள்ளதாம்.
கவர்ச்சியை காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றாலும் கூட இது நிச்சயம் நல்ல முயற்சி என்பதில் சந்தேகமில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications