சென்னையில் வரும் .29-ல் கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவருக்கு பாராட்டு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பாரதியார் சங்கம் சார்பில் கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் கதிர்காமநாதனுக்குப் பாராட்டு விழா நடத்த உள்ளது.
சென்னை பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில் வரும் 29-ந் தேதி மூத்த வழக்கறிஞர் இரா. காந்தி தலைமையில் கதிர்காமநாதனுக்குப் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
தமிழறிஞர் இரா. மதிவாணன் வரவேற்க, நெல்லை இராமச்சந்திரன் வாழ்த்துப்பா வாசிக்கிறார்.
முன்னாள் துணை வேந்தர் மேஜர் து. ராஜா, முனைவர் வ.வே.சுப்பிரமணியன், முனைவர் உலகநாயகி பழனி ஆகியோர் கதிர்காமநாதனை பாராட்டிப் பேசுகின்றனர். பின்னர் கதிர்காமநாதன் ஏற்புரையாற்றுகிறார்.
செய்தி: முனைவர் மு. இளங்கோவன்
http://muelangovan.blogspot.in/












Click it and Unblock the Notifications