30ல் துபாய் தமிழ்ச் சங்கத்தின் குடும்ப சங்கமம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் தமிழ்ச் சங்கம் தனது உறுப்பினர்களுக்காக குடும்ப சங்கமம் என்ற நிகழ்ச்சியை வரும் 30ம் தேதி நடத்துகிறது.

துபாய் இந்திய‌ க‌ன்சுலேட் ஆத‌ர‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ க‌மிட்டியில் இணைவு பெற்ற‌ துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் வரும் 30ம் தேதி காலை 8 ம‌ணி முத‌ல் துபாய் ம‌ம்சார் பூங்காவில் குடும்ப‌ ச‌ங்க‌ம‌ம் நிக‌ழ்ச்சியை உறுப்பின‌ர்க‌ளுக்காக‌ ந‌ட‌த்த‌ இருக்கிற‌து என‌்று பொழுதுபோக்குத்துறை செய‌லாள‌ரும், துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ நிறுவ‌ன‌ புர‌வ‌ல‌ருமான‌ ஏ. முஹ‌ம்ம‌து தாஹா தெரிவித்துள்ளார்.

முழு நாள் நிக‌ழ்ச்சியாக‌ ந‌டைபெற‌ இருக்கும் இந்த‌ குடும்ப‌ ச‌ங்க‌ம‌த்தின்போது காலை உண‌வு, ம‌திய‌ உண‌வு, மாலை சிற்றுண்டி உள்ளிட்ட‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். இந்த நிகழ்ச்சியையொட்டி பல வேடிக்கை ம‌ற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் என்று பல நிகழ்ச்சிகள் சிந்தைக்கு விருந்த‌ளிக்கும் வ‌ண்ண‌ம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் உறுப்பின‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் 050 6900 230 / 050 467 4399 ஆகிய‌ எண்க‌ளில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+