அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் ரமலாம் கிரீட்டிங்ஸ் போட்டி
துபாய்: அமீரக தமிழ்ச் சங்கம் ரமலான் பண்டிகையை முன்னி்ட்டு புகைப்படத்தாலான வாழ்த்து அட்டைகள் செய்யும் போட்டியை நடத்துகிறது.
அமீரக தமிழ்ச சங்கம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு புகைப்படத்தாலான வாழ்த்து அட்டைகள் செய்யும் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அவர்கள் எடுத்த புகைப்படத்தை வைத்து ரமலான் வாழ்த்து அட்டையை தயாரித்து [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
வாழ்த்து அட்டைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ரமலான் மாதத்தின் கடைசி நாள் ஆகும். உங்களைப் பற்றிய விவரங்களுடன் வரும் வாழ்த்து அட்டைகள் கிடைத்த 48 மணிநேரத்தில் அமீரக தமிழ்ச் சங்க இணையதளத்தில் போட்டிக்காக உருவாக்கப்பட்டுள்ள பக்கத்தில் வெளியிடப்படும்.
அக்டோபர் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்திற்கு சென்று விதிமுறைகளைக் காணவும்.












Click it and Unblock the Notifications