ஷார்ஜாவில் தமிழ்நாடு பண்பாட்டு கழக தலைவர் பா.இராமலிங்கத்திற்கு பிரிவு உபசார விழா

ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தில் கால் நூற்றாண்டிற்கும் அதிகமாக பணியாற்றி ஓய்வு பெற்ற கவிஞர் பா.இராமலிங்கத்திற்கு, கடந்த 1ம் தேதி பிரிவு உபசார விழா நடைபெற்றது. கீர்த்தி உணவகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, ஷார்ஜா சபையர் உணவக உரிமையாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். மதுக்கூர் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி, அமீரக காயிதேமில்லத் பேரவை பொது செயலாளர் ஏ.முஹம்மது தாஹா, வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் எல்.கோவிந்தராஜ், அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் பொருளாளர் அப்துல் லத்தீப், அஷ்ரஃப் அலி, திருவிடச்சேரி எஸ்.எம்.பாரூக், தாய்மண் வாசகர் வட்டத்தின் செ.ரெ.பட்டணம் மணி, நகரத்தார் சங்கத்தின் வள்ளியப்பன், போட்டோகிராபர் மதுக்கூர் நூருல் அமீன், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொது செயலாளர் முதுவை ஹிதாயத், சீமான் தலைவர் மாலிக் மற்றும் தமிழகப் பிரமுகர்கள் பலரும் வாழ்த்துரை வழங்கினர்.
வாழ்த்துரையில் கவிஞர் இராமலிங்கம் ஆற்றிய தமிழ் சேவைகளை பலரும் நினைவு கூர்ந்தனர். மேலும் தனது பணியிடத்தில் அரபியர், பாகிஸ்தானியர் உள்ளிட்ட பல்வேறு நாட்டவரும், இந்தியாவில் தமிழகத்தை தவிர பிற மாநிலத்தவரும் வணக்கம், வாழ்க என்று கூறும் வகையில் பணிபுரிந்து வந்ததை குறிப்பிட்டனர்.
மேலும் ஷார்ஜா பகுதியில் தமிழர்கள் இன்னல்களுக்கு உள்ளாகும் போது இராமலிங்கம் தலைமையிலான ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தினரின் தன்னலமற்ற பணியை பலரும் நினைவு கூர்ந்தனர்.
விழாவில் ஏற்புரை வழங்கிய இராமலிங்கம் கூறியதாவது,
வந்தோம், பணி புரிந்தோம், பொருளீட்டினோம், உதவுவோம் எனும் அடிப்படையில் என்னால் முடிந்த அளவிற்கு பணிபுரிந்தேன். இந்த பணிகள் தனிப்பட்ட ஒரு இராமலிங்கத்தின் பணியல்ல. நாம் அனைவரது கூட்டு முயற்சியே ஆகும். 25 ஆண்டுகளுக்கு முன்பு அமீரகம் வந்த போது ஏதாவது ஒரு தமிழனை பார்க்கமாட்டோமா என்ற ஏக்கத்தில் உதித்தது தான் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம். எங்கு சென்றாலும் தமிழ்ப்பணி தொடர வேண்டும் என்பதே என்பது விருப்பம் என்றார்.
விழாவை அரசன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் முனைவர் மூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார். விழாவில் அமீரகத்தின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications