கைத்தான் குத்பா பள்ளிக்கு இலவச பேருந்து சேவை: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் அங்குள்ள தமிழர்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமைகளில் கைத்தானில் உள்ள தமிழ் ஜும்ஆ குத்பா பள்ளிவாசலுக்கு இலவச பேருந்து சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் அப்பாஸியா மற்றும் ஜலீப் அல் ஷௌவைக் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழர்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமைகளில் கைத்தானில் உள்ள தமிழ் ஜும்ஆ குத்பா பள்ளிவாசலுக்கு இலவச பேருந்து சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு பேருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11.15 மணிக்கு அப்பாஸியா, முகமது பின் காசிம் ரோட்டில் உள்ள பங்காளி மஸ்ஜிதில் இருந்து புறப்படும்.
அந்த பேருந்து முவாஸலாத் ரோடு(ஜெர்மன் கிளினிக்), மக்ஃபர் ரோடு( காவல் நிலையம்), ஜலீப் ஜாமியா, முஜம்மா காம்பிளக்ஸ் பேருந்து நிறுத்தம், குவைத் இந்தியன் பள்ளி பேருந்து நிறுத்தம், 6வது ரிங் ரோடு வழியாக குத்பா பள்ளியை அடையும். தொழுகைக்குப் பிறகு இதே வழியில் பேருந்து செல்லும். எனவே, இந்த இலவச பேருந்து சேவை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து மேலும் விவரம் அறிய சையது அலி- 9715 6150 மற்றும் அல்ஹாஜ் முகமது நாசர்- 9730 2747 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
