நாளை குவைத்தில் இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்
Subscribe to Oneindia Tamil
குவைத்: குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை நடத்தும் இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம் நாளை(6ம் தேதி) குவைத்தில் நடைபெறுகிறது.
குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை, குவைத் மருத்துவ கழகம் மற்றும் இந்திய மருத்துவர் பேரவை ஆகியவை இணைந்து மருத்துவ விழிப்புணர்வு முகாமினை நாளை(06.01.2012) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்துகின்றன. இந்த முகாம் சல்மியாவில் உள்ள இந்தியன் பப்பளிக் ஸ்கூலில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு குவைத் வாழ் தமிழ் மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 94420919,97936196,97869749 ஆகிய அலைபேசி எண்களிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications