ரிஷப ராசி பெண்ணை எப்படிக் கவருவது?

அதிலும் சில வகை பெண்களை எப்படி குட்டிக்கரணம் போட்டாலும் இம்ப்ரஸ் பண்ணவே முடியாது. அதில் ஒரு வகையில் வருபவர்கள் இந்த ரிஷப ராசிப் பெண்கள்.
ஒவ்வொரு ராசிப் பெண்ணுக்கும், ஒவ்வொரு மாதிரியான குணம் உண்டு. அந்தந்த குணத்திற்கேற்றபடி அணுகினால் மட்டுமே அந்தப் பெண்களை கவர முடியுமாம். அந்த வகையில் கவருவதற்கு ரொம்பக் கஷ்டமானவர்கள் ரிஷப ராசிப் பெண்கள்தானாம்.
ரிஷப ராசிப் பெண்களின் கேரக்டரே தனி என்று கூறலாம். அப்படி என்னதான் அவர்களிடம் உள்ளது என்பதைப் பார்ப்போமா...
ரிஷப ராசிப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப் பட மாட்டார்கள். என்னதான் ஐஸ் வண்டியைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்தினாலும், அவர்கள் மசிய மாட்டார்கள். அதேசமயம், உங்கள் மீது அந்தப் பெண்ணுக்கு உண்மையாகவே அக்கறை வருமானால், அவர்களே உங்களிடம் வந்து ஸ்டிரைட்டாகப் பேசி விடுவார்களாம்.
ரிஷப ராசிப் பெண்கள் எந்த முடிவையும் மனதைக் கேட்டு முடிவு செய்ய மாட்டார்கள். அறிவுப்பூர்வமாகத்தான் எதையும் முடிவு செய்வார்கள். மேலும் ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கு முன்பு ஆயிரம் தடவை யோசிப்பார்கள். இதனால் அவர்கள் ஒரு முடிவுக்கு ரொம்ப அவகாசம் எடுத்துக் கொள்வார்கள்.
எதையும் முயற்சித்துப் பார்ப்போமே என்று சோதனை ரீதியாகவெல்லாம் இவர்கள் எதிலும் ஈடுபட மாட்டார்கள். இது சரிப்பட்டு வரும் என்று மனதில் பட்டால் மட்டுமே அவர்கள் களம் இறங்கி வருவார்கள்.
இவர்கள் எதிலும் பிடிவாதம் காட்டினாலும் பணம், பொருட்கள் மீது சற்று பற்று மிக்கவர்களாக இருப்பார்களாம். எனவே நல்ல விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுத்தால் உங்களைப் பார்த்து சின்னதாக ஒரு புன்னகையை வைக்க வாய்ப்புண்டு.
இவர்கள் உணர்ச்சிவசப்படுவதில் கால தாமதம் செய்தாலும், உணர்ச்சி அதிகம் மிக்கவர்கள். உணர்வுப்பூர்வமாக இவர்களின் மனை டச் செய்து விட்டால் போதும் பிறகு பாருங்கள், உங்கள் மீது இவர்கள் பொழியும் உணர்ச்சி மழையை.
அன்புக்கு அடிமையானவர்கள் இவர்கள். எப்போதும் இவர்கள் மீது நீங்கள் அன்பாக இருந்தாலே போதும், காலம் பூராவும் உங்களை விட்டு விலக மாட்டார்கள். முத்தம், அன்பான கட்டிப்பிடிப்பு, காதல் மொழி ஆகியவற்றை நிறையவே விரும்புபவர்கள்.
எதிலும் நேர்மையை எதிர்பார்ப்பவர்கள் இவர்கள். எதைச் செய்தாலும் நேரடியாக, நேர்மையாக இவர்களிடம் வெளிப்படுத்தினால்தான் இவர்களுக்கு உங்களைப் பிடிக்கும். நம்பிக்கை துரோகம் செய்பவர்கள், சொன்ன சொல்லை மீறுபவர்கள், பிடிக்காத செயலை செய்பவர்களை இவர்களுக்கு அறவே பிடிக்காதாம்.
ரிஷப ராசிப் பெண்களை இம்ப்ரஸ் செய்ய நினைப்பவர்கள் எடுத்தவுடன் காதலைச் சொல்வது உசிதமில்லை. மாறாக, நிறையப் பேசுங்கள். வாக்கிங் கூட்டிப் போங்கள், டின்னருக்குக் கூட்டிப் போங்கள். அவர்களுக்குப் பிடித்ததை அறிந்து அதை வாங்கிக் கொடுங்கள். உங்களிடம் உள்ள அறிவுப்பூர்வமான விஷயங்களை அவர்களை உணர வையுங்கள். பிறகு மெதுவாக இதயத்தைத் திறந்து காட்டுங்கள்.
செஞ்சு பாருங்க, உங்களையும் அவங்களுக்குப் பிடிக்க ஆரம்பிக்கும்...!
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications