உங்கள் துணையிடம் எத்தனை வாட்டி ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்க?

பிரபல தமிழ் தொலைக்காட்சி தம்பதிகளுக்காக நடித்திய நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஒரு தம்பதியைப் பார்த்து நீங்கள் ஒருவருக்கொருவர் எத்தனை முறை 'ஐ லவ் யூ' சொல்லி இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த தம்பதி சிறிது நேரம் யோசித்துவிட்டு அப்படி எதுவும் சொன்னதாக ஞாபம் இல்லை என்று கூறினர்.
இந்த பதிலைக் கேட்டு ஒருங்கிணைப்பாளர் மட்டுமின்றி பலரும் ஆச்சரியப்பட்டனர். என்ன தான் இன்றைய உலகில் ஆளாளுக்கு காலில் வெந்நீரை ஊற்றியபடி ஓடினாலும் கணவன், மனைவி தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள நிச்சயம் நேரம் ஒதுக்க வேண்டும். காதலன் காதலி மட்டும் தான் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்றில்லை. மனைவி கணவனுக்கும், கணவன் மனைவிக்கும் ஐ லவ் யூ சொல்லலாம். அப்படி சொல்ல வெட்கப்படத் தேவையில்லை.
உங்களுக்கு எப்பொழுதெல்லாம் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் உங்கள் வாழ்க்கை துணையிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். இது உங்களுக்கு இடையேயான அன்பை பலப்படுத்தும். உங்கள் கணவனோ, மனைவியோ காதலைச் சொல்ல வெட்கப்படுகிறார்களா கேட்டு வாங்குங்கள். அலுவலகத்தில் இருக்கையில் மனைவி அல்லது கணவரின் நினைப்பு வருகிறதா ஐ லவ் யூ என்று ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பிப் பாருங்களேன். அது உங்கள் துணைக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் என்று. இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் தான் தம்பதி இடையேயான உறவை பலப்படுத்தும்.


Click it and Unblock the Notifications
