இன்று துபாயில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு நகைச்சுவைத் திருவிழா
Subscribe to Oneindia Tamil

'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்' எனும் தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வரும் உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் துபாய் கிளை தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு நகைச்சுவைத் திருவிழாவினை இன்று(20ம் தேதி) மாலை 6 மணிக்கு அல் குஸைஸ் ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் நடத்துகிறது என்று அதன் தலைவர் மொஹிதீன் பிச்சை தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு தனித்திறன்களை வெளிப்படுத்திட விரும்புவோர் அனைவரும் பங்கேற்கலாம்.
இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 050-9227379 எனும் அலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சலிலோ தொடர்புகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications