நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற மஸ்கட் தமிழ் முஸ்லிம் சங்க இஃப்தார் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மஸ்கட்: மஸ்கட் தமிழ் முஸ்லிம் சங்கம் கடந்த 27ம் தேதி இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தியது.
மஸ்கட் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் இஃப்தார் நிகழ்ச்சி 27.07.2012 அன்று மாலை வாதி கபீர் மஸ்கட் டவரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹாஜி மீரான் சாஹிப் மற்றும் மௌலவி முஹம்மது ஃபாரூக் ஆகியோர் ரமலான் மாதம் குறித்த சிறப்பு இயல்புகளை சிறப்புச் சொற்பொழிவாக வழங்கினர்.
நிகழ்ச்சியில் 650க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த முஹம்மது அன்வர் தெரிவித்தார். அப்துல் ரவூஃப், சிராஜுத்தீன் பஜல் அலி உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications