5ல் அபாவில் இந்திய தூதரக குழு ஆலோசனை நேரம்
Subscribe to Oneindia Tamil
ஜெத்தா: இந்திய தூதரகக் குழு வரும் 5ம் தேதி அபாவில் உள்ள அல் ரயா ஹோட்டலுக்கு வருகிறது. அங்கு சவூதி வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குகிறது.
சவூதி அரேபியாவின் அபா நகருக்கு வரும் 5ம் தேதி இந்திய தூதரகக் குழு வருகிறது. அபாவில் உள்ள அல் ரயா ஹோட்டலில் தங்கும் அந்த குழுவை சவூதி வாழ் இந்தியர்கள் சந்தித்து பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கேட்கலாம். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஆலோசனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டலின் தொலைபேசி எண்ணான 07-2270654ல் தொடர்பு கொள்ளலாம். சவூதி வாழ் இந்தியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு்ககொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications