நாளை துபாயில் ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் (INK) 138வது கலந்துரையாடல் நிகழ்ச்சி 17.02.2012 அன்று துபாய் முஸ்ரிப் பூங்காவில் காலை 10 மணி முத‌ல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிற‌து என‌்று அதன் செய‌லாள‌ர் க‌தி. முத்துராம‌ன் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியின் துவ‌க்க‌மாக‌ அல‌மு க‌ண்ண‌ன் இறை வ‌ண‌க்க‌ம் பாடுகிறார். குறளமுதம் எனும் த‌லைப்பில் ராஜேஷ் ராமநாதனும், சங்கப்பாடல் எனும் த‌லைப்பில் சுபஸ்ரீ மணிகண்டன் ம‌ற்றும் அனுஸ்ரீ மணிகண்டன் ஆகியோரும் நிக‌ழ்ச்சிகள் வ‌ழ‌ங்குகின்றன‌ர்.

த‌லைவ‌ர் உரையினை ர‌மேஷ் ராம‌நாத‌னும், சங்க செயலாளர் கதி. முத்துராமன் வ‌ர‌வேற்புரையினையும் வழங்குகின்றனர்.

மேலும் உன்னை நீ சோதித்துப்பார்(BMI) , உடற்ப்பயிற்சியும் உத்வேகமும் (Fitness First), சங்க நடவடிக்கைகள் உள்ளிட்ட‌ த‌லைப்புக‌ளில் உரைக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ இருக்கின்ற‌ன‌.

மரம் வளர்ப்போம், நில் கவனி செல், சகலகலா வல்லவன், ராஜநடை, பந்து பற பற, ஊட்டிவிடும் உறவு, பிப்ரவரி 14, உரி அடி, ஆடுகளம், பிங்கோ எனும் த‌லைப்புக‌ளில் ஆண்க‌ள், பெண்க‌ள், த‌ம்ப‌திய‌ர், குழ‌ந்தைக‌ள் என‌ ப‌ல்வேறு பிரிவின‌ருக்கு போட்டிக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்றது.

இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 055-9006365 எனும் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+