13ல் துபாயில் வானலை வளர்தமிழின் கவியரங்கம், சிறப்பிதழ்கள் வெளியீட்டு விழா
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் இலக்கிய கூட்டம் வரும் 13ம் தேதி காலை 9.30 மணிக்கு துபாய் கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் பவன் உணவகத்தின் முதல் தளத்தில் நடைபெறுகிறது. அப்போது தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழ்களாக ‘தனிமை' மற்றும் ‘ஆசை' ஆகியவை வெளியிடப்படவிருக்கின்றன என அமைப்பின் தமிழ்த்தேர் ஆசிரியர் காவிரிமைந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘தனிமை' மற்றும் ‘ஆசை' ஆகிய தலைப்புகளில் திருமதி. நர்கீஸ் ஜியாவுதீன் தலைமையில் கவியரங்கம் நடக்கிறது.
தமிழ் ஆர்வலர் திரு. அப்துல் காதர் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மதுரை மாவட்டத் தலைவர்) அவர்களும், ஸ்மைல் சுரேஷ் கிருஷ்ணா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.
கவிதை எழுத விருப்பம் உள்ளவர்கள், படைப்பாளிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை நிகழ்ச்சிக்கு வருக வருக என ஏற்பாட்டாளர்கள் வரவேற்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 055 5993120 எனும் அலைபேசி எண்ணிலும், 050 4226752 மற்றும் 050 4184245 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications