லேனா தமிழ்வாணனுக்கு 'தூரிகையின் தாயகம்', ரவி தமிழ்வாணனுக்கு 'முத்தமிழ் வித்தகன்' விருது

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் மணிமேகலைப் பிரசுரத்தின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி மாலை கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.

நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் பல்வேறு சுவையான சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.

சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக ஆசிஃப் மீரான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.
புரவலர் ஹுசைன் அப்துல் காதர்,ஸ்மைல் அமைப்பின் தலைவர் சுரேஷ், கலையன்பன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

கீழை சீனா தானாவின் அனைத்து சமயத்தவர்க்கான அறிவுரைகள், திருச்சி சையதின் புகழ் பெற்றவர்களைப் பற்றிய ஒரு ரசிகனின் பதிவுகள், கந்தநாதனின் மீண்டும் மீண்டும் பிறந்து வா உள்ளிட்ட பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டன.

பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, ஸ்கை சீ எக்ஸ்பிரஸ் இயக்குநர் செய்யது எம். அப்துல் காதர், சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜ், காவிரிமைந்தன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

லேனா தமிழ்வாணனுக்கு ‘தூரிகையின் தாயகம்’ எனும் விருதும், ரவி தமிழ்வாணனுக்கு ‘முத்தமிழ் வித்தகன்’ எனும் விருதும் சங்கமம் தொலைக்காட்சியால் வழங்கப்பட்டது.

குமுதம் மற்றும் கல்கண்டு இதழ்களின் துணை ஆசிரியர் லேனா தமிழ்வாணன் சிறப்புரை நிகழ்த்தினார். நேரத்தின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு சுய முன்னேற்றத் தகவல்கள் குறித்து விவரித்தார்.

திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாரூக் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஈமான் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் நிர்வாகி முஹம்மது மஃரூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+