ரூ.25 லட்சத்திற்கு உள்ளாடைகள் வாங்கிய மிஷல்!

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷல் கடந்த ஆண்டு மேன்ஹாட்டனில் ஷாப்பிங் செய்தார். அப்போது அவர் ஒரு பெரிய கடைக்கு சென்று ரூ.25 லட்சத்திற்கு ஏஜென்ட் புரவகேட்டர் என்ற பிரபல பிராண்ட் உள்ளாடைகள் வாங்கியுள்ளார். அவர் உள்ளாடைகள் வாங்கியதற்கு பிறகு அந்த பிராண்டின் விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
ஏஜென்ட் புரவகேட்டர் பிராண்ட் வாங்கும் பெரிய இடத்து பெண்களில் மிஷலும் ஒருவரா என்பது குறித்து தெரிவிக்க அதன் சிஇஓ கேரி ஹோகர்த் மறுத்துள்ளார். ஆனால் அண்மையில் தங்கள் பிராண்டுக்கு அமெரிக்காவில் சற்றும் எதிர்பாராத வகையில் பிரபலங்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்று அவர் நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏஜென்ட் புரவகேட்டர் கடைகளில் பிரபல பாப் பாடகிகள் பியான்ஸே நோலஸ் மற்றும் கிறிஸ்டினா அகுலேரா ஆகியோர் சென்றுள்ளனர். அவர்கள் சுமார் ரூ.95,000 அளவுக்கு உள்ளாடைகள் வாங்கியுள்ளனர்.
பிரபல பேஷன் டிசைனர் விவியன் வெஸ்ட்வுட்டின் அப்போதைய மனைவி செரினா ரீஸ் மற்றும் மகன் ஜோசப் கார் ஆகியோர் சேர்ந்து கடந்த 1994ம் ஆண்டு ஏஜென்ட் புரவகேட்டர் பிராண்டை துவங்கினர்.












Click it and Unblock the Notifications