ஒஹியோ டேட்டன் தமிழ் சங்க பொங்கல் மற்றும் குடியரசு தின விழா

அவர்களின் புராதன நிறுவனமான சைக்கிள் கம்பெனியின் அடையாளம் இன்றும் டேட்டனில் இருக்கிறது. ரைட்ஸ் சகோதரர்களின் நினைவாக அமைந்துள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய ஏர்ஃபோர்ஸ் மியூஸியம் இங்கு மிகச்சிறந்த சுற்றுலா தளமாகும்.
டேட்டன் தமிழ் சங்கம்
இங்கு பல்வேறு துறையை சார்ந்த தமிழர்கள் பெருவாரியாக வசித்து வருகிறார்கள். எத்தனையோ தடவை முயன்றும் சென்ற ஆண்டு வரை முறையான தமிழ் அமைப்பு இல்லாதது இங்குள்ள தமிழர்களுக்கு பெருங்குறையாக இருந்து வந்தது. பல முயற்சிகளுக்கு பின் கடந்த ஆண்டு டேட்டன் தமிழ் சங்கம் உருவாக்கப்பட்டு, டேட்டன் வட்டார தமிழர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சி பொங்கல் மற்றும் இந்திய குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 11, சனிக்கிழமை மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை சென்டர்வில், எண் 99 வர்ஜினியா அவென்யுவில் அமைந்துள்ள ‘க்ளைன் ஆரம்பப்பள்ளி ஆடிட்டோரி'யத்தில் விழா நடைபெறுகிறது.
குழந்தைகள், பெரியவர்களுக்கான போட்டிகள், பாடல்கள், பாரம்பரிய நடனம், திரையிசை நடனங்கள். உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. டேட்டன் வாழ் முன்னோடி தமிழர்கள் உட்பட பலரும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொள்கிறார்கள். வருகை தரும் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், டேட்டன் வட்டார வாழ் தமிழர்களுக்கு சக தமிழர்களை அறிந்து கொள்ளும் ஒரு அறிய வாய்ப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமைகிறது.
டேட்டன் தமிழ் சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளதால் அனைத்து டேட்டன் வட்டார தமிழர்களும் விழாவில் பங்கேற்குமாறு தமிழ் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் சங்க நிர்வாகிகள் ராஜ், செல்வம், ஆனந்தபத்மநாபன், ஆனந்தகுமார், சுமா, ஜெயந்தி, மீணாள், பழனி, டாக்டர். மஞ்சுளா, மஞ்சு ஆகியோர் செய்து வருகிறார்கள். மேலதிக தகவல்களுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications