நீங்க 'ஆப்பிள்' பெண்ணா, இல்லை 'கேரட்' பெண்ணா?

அந்த சர்வேயை பார்ப்போமா...?
இங்கிலாந்துப் பெண்களில் ஐந்தில் ஒருவர் பட்டர்நெட் ஸ்குவாஷ் எனப்படும் ஒருவகையான பூசணிக்காய் சைசில் இருக்கிறார்களாம். அதாவது அவர்களது மார்பும், இடுப்பும் ஒரே சைசில் இருக்குமாம். இருப்பினும் இடுப்புக்கும், மார்புப் பகுதிக்கும் இடைப்பட்ட வயிற்றுப் பகுதியின் அளவு 10 இன்ச் குறைவாக இருக்குமாம்.
இதுபோன்ற தோற்றம் உடையவர்களாக கெல்லி ப்ரூக், கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ் ஆகிய நடிகைகளை உதாரணம் காட்டியுள்ளனர் அந்த சர்வேயை எடுத்தவர்கள்.
அதேபோல நான்கில் ஒரு பெண் கேரட் சைசில் இருக்கிறார்களாம். 23 சதவீதம் பேர் சுரைக்காய் வடிவிலும், 18 சதவீதம் பேர் ஆப்பிள் வடிவிலும் உள்ளனராம்.
கத்திரிக்காய் மற்றும் புரோக்கோலி வடிவிலும் கணிசமான பெண்கள் உள்ளனராம். இவர்கள் 6 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே உள்ளனராம்.
பிரபல பாடகிகளான ஜெனீபர் ஹட்சன், கெர்ரி கடோனா ஆகியோர் ஆப்பிள் சைஸ் பெண்களாம். இவர்களின் வயிற்றுப் பகுதியானது, இடுப்பு மற்றும் மார்பு அளவுக்கு சமமாக அல்லது அதை விட பெரிதாக இருக்குமாம். மேலும் இந்த மூன்றுக்கும் இடையிலான வித்தியாசம் 2 அல்லது 4 இன்ச் அளவுதான் இருக்குமாம்.
லின்ட்சே லோஹன் மற்றும் உல்ரிகா ஜோன்சன் ஆகியோரை புரோக்கோலி வகை பெண்களாக தரம் பிரித்துள்ளனர். இவர்களுக்கு மார்பளவு பெரிதாக இருக்கும். அதேசமயம், இடுப்பும், வயிற்றுப் பகுதியும் ஒரே அளவில் இருக்குமாம்.
ஹாலிவுட் நடிகைளான கேமரூன் டயஸ், நிக்கோல் கிட்மேன் ஆகியோர் கேரட் வகை பெண்களாம். இவர்களுக்கு வயிற்றுப் பகுதியை விட இடுப்பும், மார்பும் அகலமாக இருக்குமாம்.
சுரைக்காய் வகை பெண்களுக்கு அவர்களின் இடுப்பை விட வயிற்றுப் பகுதியானது 10 இன்ச் சிறிதாக இருக்குமாம். அதேபோல அவர்களின் பின்னழகு பெரிதாக இருக்குமாம். மார்பளவு சிறிதாக இருக்குமாம்.
சுரைக்காய் வகை பெண்களுக்கு அவர்கள் காட்டியுள்ள உதாரணம் ஜெனீபர் லோபஸ்.
கிளேர் ரிச்சர்ட்ஸ் என்பவரை கத்திரிக்காய் வகை பெண்ணுக்கு உதாரணம் காட்டியுள்ளனர். இவர்களுக்கு இடுப்பு பெரிதாக இருக்குமாம், மார்பு சிறிதாக இருக்குமாம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் வயிற்றுப் பகுதி இருக்குமாம்.
விட்டாலிட்டி ஷோ என்ற ஒரு நிகழ்ச்சிக்காக இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 3000 பேர் கலந்து கொண்டனர். லண்டனில் இந்த ஷோ மார்ச் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ளது.
இப்படியெல்லாம் ஒரு சர்வே...!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications