துபாயில் தமிழ்த்துளி முதலாம் ஆண்டு விழா
துபாய்: துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 23ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை ஒரு இனிய பயணமாக கொண்டாடப்பட இருக்கிறது என அதன் நிறுவன தலைவி பிரியா விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்துளியின் அங்கத்தினர்கள் தங்களது குடும்பத்தினருடன் துபாய் அல் கிஸஸ் கிராண்ட் ஹோட்டலில் இருந்து 23.03.2012 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பேருந்து மூலம் அபுதாபி செல்லும் வழியில் உள்ள சஹாமா குழந்தைகள் மிருகக்காட்சி சாலை மற்றும் பூங்காவிற்கு (Sahama Kid's Zoo Park ) அழைத்துச் செல்லப்படுவர்.
பேருந்து பயணத்தின் போது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தமிழ் நீதிக்கதைகள், நகைச்சுவை கதைகள் கூறுவதோடு, பாட்டுக்குப் பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மதியம் தமிழ் பாரம்பரிய உணவு வழங்கப்படும்.
மாலையில் துபாய் திரும்பிய பின்னர் தேரா நாசர் சதுக்கத்தில் உள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. தமிழ் மொழியைப் பற்றிய ஒரு காணொளி விளக்கம், தமிழ்த்துளியின் ஓராண்டுப் பயணம் பற்றிய காணொளி,சிறப்பு விருந்தினர் உரை, உறுப்பினர்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்களும், உறுப்பினர் அல்லாதவர்களும் வரும் 15ம் தேதிக்குள் 050 7472432 மற்றும் 055 5571985 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications